ஒரு நிமிட வாசிப்பு

 20 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்

செய்திப்பிரிவு

இந்தியாவுக்கு 20 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை விற்பனை செய்ய ஜோ பைடன் அரசு ஓப்புதல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜோ பைடன் அரசின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறும்போது, ” 20 பில்லியன் டாலர் மதிப்பிலான மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்ட பாதுகாப்புத் தளவாடங்களை இந்தியாவுக்கு விற்கப்பட இருக்கிறது. இது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையான்மை தொடர்பாக அமெரிக்க அரசின் அக்கறையை காட்டுகிறது” என்று தெரிவித்தார்.

பைடன் அரசு இந்தியாவுடனான ராணுவத் தளவாட விற்பனை ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய இருக்கிறதா என்று பத்திரிகையாளர்கள் கேட்க, ”அது பற்றிக் கூற இப்போது எதுவும் இல்லை என்றும் ஒப்பந்தத்தில் ஏதேனும் மாற்றம் கொண்டு வரப்பட்டால் உடனடியாக தெரிவிக்கப்படும்” என்றும் அவர் கூறினார்.

முன்னதாக காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் நேரடியாக பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT