தமிழக பாஜக துணைத் தலைவரான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடலாம் என செய்திகள் சிறகடிக்கின்றன. இங்கு கவுண்டர்கள் வாக்குகள் மட்டுமே சுமார் 40 ஆயிரம் இருக்கிறதாம்.
எனவே, இங்கு களமிறங்கினால் கவுரவம் காக்கலாம் என்று கணக்குப் போடுகிறாராம் அதிகாரி. சிட்டிங் எம்எல்ஏ-வான செந்தில்பாலாஜியை எளிதில் வீழ்த்த முடியுமா என்று அவர் கேட்டதற்கு, “கவுண்டர்கள் ஆதரவில் தான் செந்தில் பாலாஜி ஜெயித்து வருகிறார். இம்முறை எடப்பாடியாரை எப்படியும் மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்பதில் கவுண்டர் சமூகத்து மக்கள் கட்சிகளை மறந்துவிட்டு நிற்கிறார்கள்.
அதை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்”என்று ஐடியா கொடுக்கிறதாம் உள்ளூர் பாஜக முகாம்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.