ஒரு நிமிட வாசிப்பு

தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக மத்திய துணை பாதுகாப்பு படை நெல்லை வருகை

அ.அருள்தாசன்

திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய துணை பாதுகாப்பு படையினர் இன்று வந்தனர்.

தமிழக சட்டப் பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பாதுகாப்பிற்காக பல்வேறு மாவட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக மத்திய துணை பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 406 பட்டாலியனை சேர்ந்த மத்திய துணை பாதுகாப்பு படையினர் 1 உதவி தளவாய் தலைமையில் 84 பாதுகாப்பு படையினர் திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்று ரயிலில் வந்தனர். அவர்களுக்கு மாவட்ட‌ காவல்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு ஆயுதப்படை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த துணை ராணுவப் படையினரை உட்கோட்ட வாரியாக பிரித்து பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்படுவார்கள் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT