ஒரு நிமிட வாசிப்பு

பாஜக தலைவர் முருகன் திமுகவைத்தான் ஆதரிப்பார்: நாஞ்சில் சம்பத் கருத்து

செய்திப்பிரிவு

பாஜக மாநிலத் தலைவர் முருகன் திமுகவைத்தான் ஆதரிப்பார் என்று திமுக நட்சத்திரப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் பிரச்சாரக் கூட்டங்கள், பேரணிகள் களைகட்டி வருகின்றன.

அந்த வகையில் இன்று அறந்தாங்கியில் நடைபெற்ற திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பிரச்சாரக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது, ''பாஜக மாநிலத் தலைவர் முருகன் திமுகவைத்தான் ஆதரிப்பார். தேர்தல் தேதியை முன்கூட்டியே அறிவித்ததில் யாருக்கோ சாதகம் உள்ளது. அதைக் கருத்தில் கொண்டுதான் முன்கூட்டியே அறிவித்திருக்கிறார்கள்.

காவிரி - வைகை- குண்டாறு என்பது கருணாநிதியின் கனவுத் திட்டம். அந்தத் திட்டத்தை நிறைவேற்ற ஓபிஎஸ் ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. பிரதமர் மோடி உதவுவேன் என்று உத்தரவாதம் தரவில்லை. இவர்கள் நிறைவேற்ற மாட்டார்கள். ஸ்டாலின் முதல்வர் ஆவார். காவிரி - வைகை- குண்டாறு திட்டத்தை நிறைவேற்றுவார்'' என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT