ஒரு நிமிட வாசிப்பு

ஹாட் லீக்ஸ்: சிராக்கின் ‘சீரிய’ பணி

செய்திப்பிரிவு

பிஹாரில் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராய் வெளியேறுகிறார்கள். அக்கட்சியின் பத்துக்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் அண்மையில் காங்கிரஸில் இணைந்தனர்.

இன்னும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விரைவில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு பயணமாகிறார்களாம். நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில், பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிட்ட லோக் ஜனசக்தி கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. கட்சியின் இந்த படுதோல்விக்குக் காரணம் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானின் தவறான முடிவுகளே என விமர்சித்து வந்தவர்கள் தான்,

தற்போது மாற்றுக் கட்சிகளுக்கு வரிசை கட்டுகிறார்கள். பணம் வாங்கிக் கொண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்ததாக போலீஸுக்குப் போகவும் சிலர் தயாராகிக் கொண்டிருக்கிறார்களாம்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.

SCROLL FOR NEXT