மதுரையின் முன்னாள் எம்பி-யான கோபாலகிருஷ்ணன். ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளர். அந்த ஆதரவில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு மீண்டும் மதுரையில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும் என நம்பினார்.
ஆனால், மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டங்களின் செயலாளர்களான செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோரைத் தாண்டி ஓபிஎஸ்ஸால் இவருக்கு வாய்ப்பளிக்க முடியாமல் போனது. இருப்பினும் “பொறுமையா இருங்க... மதுரை மேயருக்கு போட்டியிடலாம்” என்று சொல்லி, கோபாலகிருஷ்ணனை அப்போதைக்கு அமைதிப்படுத்தினார் ஓபிஎஸ்.
ஆனால், கடைசிவரை மேயர் தேர்தலுக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அதனால் இப்போது, “சட்டமன்றத் தேர்தலிலாவது மதுரை கிழக்குத் தொகுதியில் நிற்க எனக்கு சீட் வாங்கிக் கொடுங்கள்” என்று ஓபிஎஸ்ஸுக்கு கடுமையாக அழுத்தம் கொடுக்கிறாராம் கோபாலகிருஷ்ணன். இத்தனைக்கும், அண்மையில் அமைக்கப்பட்ட அதிமுக வழிகாட்டும் குழுவின் அங்கமாகவும் இருக்கிறார் கோபாலகிருஷ்ணன்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.