ஒரு நிமிட வாசிப்பு

இந்தோனேசியாவில் சுரங்க விபத்து: 3 பேர் பலி; பலர் மாயம்

செய்திப்பிரிவு

இந்தோனேசியாவில் சுலவேசி தீவில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர். பலர் மாயமாகினர்.

இதுகுறித்து மீட்புப் பணி அதிகாரிகள் தரப்பில், “சுலவேசி மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகினர். பலர் மாயமாகி உள்ளனர். பலர் மண்ணில் புதையுண்டுள்ளதால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் விபத்து நடத்துள்ளது. சுரங்க இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய தொழிலாளர்கள் ஆக்ஸிஜன் சுழற்சி இல்லாததால் பலியாகியுள்ளனர். சுரங்கத்தில் பணி செய்தவர்களின் விவரம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT