ஒரு நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கோவை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது:

''தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்ட கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும், மார்ச் 1-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையாக இருக்கும்''.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT