ஒரு நிமிட வாசிப்பு

தூத்துக்குடியில் கறுப்பு உடை அணிந்து சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 593 பேர் கைது

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கறுப்பு உடை அணிந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 593 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில‌ முடிவின்படி கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சத்துணவு பெண் ஊழியர்கள் தலைமையில் கறுப்பு உடை அணிந்து மறியல் போராட்டம் நடைபெற்றது.

அதன்படி தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் அம்பேத்கர் சிலை அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஏ.பாக்கியசீலி தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் எஸ்.பொன்சேகர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில துணைத் தலைவர் மு.தமிழரசன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட தலைவர் செந்தூர்ராஜன், மாவட்ட துணைத் தலைவர் அண்ணாமலை பரமசிவன், ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் என் வெங்கடேசன் போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் என்.வெங்கடேசன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார்.

சத்துணவு ஊழியர்களை முழு நேர ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட 565 பெண்கள் உள்ளிட்ட 593 பேரை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT