திமுகவுக்கு வியூக வகுப்பாளர்களாக களமிறங்கி இருக்கும் ஐபேக் பங்காளிகள், போகும் இடங்களில் எல்லாம் உடன்பிறப்புகளை உண்டு இல்லை எனப் படுத்தி எடுக்கிறார்களாம்.
கட்சியின் விஐபி-க்கள் பரப்புரைக்கு வந்தால், அதற்கு முதல்நாளே அந்தப் பகுதி முக்கிய நிர்வாகிகளை அழைத்துப் பேசும் ஐபேக் அண்ணாச்சிகள், “நாளை இத்தனை மணிக்குள் இத்தனை ஆயிரம் பேரை அந்த இடத்தில் திரட்டி நிறுத்திடுங்க” என்று அதாட்டியமாய் ஆர்டர் போடுகிறார்களாம்.
இதில் ஏதாவது சுணக்கம் ஏற்பட்டால் உடனடியாக குறிப்பெடுத்து அறிவாலயத்துக்கு அப்டேட் செய்துவிடுகிறார்களாம். இதனால், கட்சித் தலைமைக்குப் பயப்படுகிறார்களோ இல்லையோ... ஐபேக் மக்களைக் கண்டால் உடன்பிறப்புகள் அலறிப்புடைக்க ஓடுகிறார்கள்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.