கடலூர் அருகே 20 ரூபாய்க்கு சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி விற்கும் கடையை நோக்கி மக்கள் படையடுத்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை பகுதியில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு வெளியூர்களில் இருந்து வந்து ஏழைத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மதிய உணவுக்காக அதிகத் தொகை செலவு செய்ய வேண்டி உள்ளது. இதைக் கருத்தில் கொண்ட சமூக ஆர்வலர்கள் மாற்று வழிகள் குறித்து யோசித்தனர்.
இதில் 'தர்மம் செய்வோம்' என்ற தன்னார்வ அமைப்பினர், 'இது உழைப்பாளிகளுக்கான கடை' என்ற பெயரில் சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி விற்கும் கடையைத் திறந்துள்ளனர்.
இங்கு 20 ரூபாய்க்கு பிரியாணி விற்கப்படுகிறது. இதனால் அங்கு உழைக்கும் மக்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். குறைந்த விலையில் பிரியாணி என்பதால் இந்தக் கடைக்கு மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.