ஒரு நிமிட வாசிப்பு

தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு எம்.பி. கூட இல்லை: அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு எம்.பி. கூட இல்லை என்ற சூழலிலும் மத்திய பட்ஜெட்டில் மாநிலத்துக்குத் தேவையானவற்றைச் செய்திருக்கிறோம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை, தியாகராய நகரில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறும்போது, ''தமிழ்நாட்டில் இருந்து பாஜக சார்பில் ஒருவர் கூட எம்.பி.யாக இல்லை. இருந்தபோதும் தமிழகத்துக்கு எவ்விதக் குறையும் இல்லாமல் பிரதமர் தேவைகளை நிறைவேற்றி வருகிறார்.

உங்கள் எல்லோருக்கும் நினைவிருக்கும். 2014-ல் பிரதமர் பதவியேற்றவுடன் இலங்கையில் தூக்குத் தண்டனை பெற்று எவ்வித வழியும் இல்லாமல் 5 மீனவர்கள் இருந்தனர். நம் பிரதமர் இலங்கை அரசிடம் பேசி அவர்களை நம் நாட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்து குடும்பத்துடன் சேர்த்தோம்.

தமிழ்நாட்டில் உள்ள தொழில்துறைப் பட்டியலை எடுத்துப் பாருங்கள். ஒவ்வொரு துறைக்கும் ஏதாவது ஒரு விதத்தில் மத்திய பட்ஜெட்டில் நிதியுதவியை நீட்டித்திருக்கிறோம்'' என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT