ஒரு நிமிட வாசிப்பு

விலைவாசி உயர்வை மக்கள் பழகிக்கொள்வார்கள்: பிஹார் அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு

ஏஎன்ஐ

விலைவாசி உயர்வை மக்கள் பழகிக்கொள்வார்கள் என பிஹார் அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் ஆகியனவற்றை எதிர்க்கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிஹார் மாநிலத்தின் பாஜக அமைச்சர் நாராயண பிரசாத் நேற்று செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தபோது, சாமானியர்கள் யாரும் கார்களில் செல்வதில்லை. அவர்களில் பெரும்பாலானோர் பேர்நுதுகளிலேயே பயணிக்கின்றனர். வெகு சிலரே தனியார் போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆகையால், பெட்ரோல், டீசல் விலையுயர்வு குறித்து அரசியல்வாதிகளே சலசலக்கின்றனர் தவிர பொதுமக்கள் யாரும் பிரச்சினை செய்யவில்லை, என்றார்.

மேலும், பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு தன்னையும் பாதிக்கிறது. ஆனால், மக்கள் இதை விரைவில் பழகிக்கொள்வார்கள் என்றார்.

அவருடைய இப்பேச்சு சர்ச்சையக் கிளப்பியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை 11வது நாளாக தொடர்ந்து அதிகரித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100ஐ எட்டியுள்ளது. தலைநகர் டெல்லியில் இன்று பெட்ரோல் லிட்டர் ரூ.90.19க்கும், டீசல் லிட்டர் ரூ.80.60க்கும் விற்பனையாகிறது.

SCROLL FOR NEXT