சிவகங்கை அருகே வளையராதினிப்பட்டியில் அமைச்சர் ஜி.பாஸ்கரன் தலைமையில் பள்ளி கட்டிடத்திற்கான பூமிபூஜை நடந்தது. அருகில் ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி. 
ஒரு நிமிட வாசிப்பு

கரோனா காலத்தில் வராமல் வாக்கு கேட்டு வரும் கட்சியினரை விரட்டிவிடுங்கள்: அமைச்சர் ஜி.பாஸ்கரன்

இ.ஜெகநாதன்

‘‘கரோனா காலத்தில் வராமல் வாக்கு கேட்டு வரும் கட்சியினரை விரட்டிவிடுங்கள்,’’ என கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.

சிவகங்கை அருகே வளையராதினிப்பட்டியில் பள்ளிக் கட்டிடத்திற்கான பூமிபூஜை நடந்தது.

ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து முன்னிலை வகித்தார்.

பூமி பூஜையைத் தொடங்கி வைத்து அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேசியதாவது: தேர்தல் வர போகிறது.

கரோனா காலத்தில் வராதவர்கள் எல்லாம், வண்ண, வண்ண கொடி கட்டிக்கொண்டு வாக்கு கேட்டு வருவார்கள். அவர்களை ஏன் வந்தீர்கள் என்று கேட்டு விரட்டிவிடுங்கள்.

சாதாரணமாக இருந்த என்னை ஜெயலலிதா அமைச்சராக்கினார். நான் சிவகங்கை தொகுதியில் போகாத கிராமங்கள் இல்லை. நான் பக்கத்து ஊர்காரர் என்பதால் அடிக்கடி வந்து உங்களது குறைகளைக் கேட்கின்றேன், என்று பேசினார்.

தொடர்ந்து அவர் சிவகங்கையில் நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசியதாவது: தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுகவை தோல்வி அடையச் செய்ய வேண்டும்.

அரசு திட்டங்களை துண்டு பிரசுரம் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும், என்று கூறினார். மாவட்டச் செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன், நாகராஜன் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT