ஒரு நிமிட வாசிப்பு

யார் தவறு செய்தாலும் மனசாட்சியுடன் நடவடிக்கை எடுப்பவர் முதல்வர்: அமைச்சர் வேலுமணி புகழாரம் 

செய்திப்பிரிவு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி யார் தவறு செய்தாலும் மனசாட்சியுடன் நடவடிக்கை எடுக்கக் கூடியவர் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழாரம் சூட்டியுள்ளார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இன்று பயனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசும்போது, ''முதல்வர் எடப்பாடி பழனிசாமி யார் தவறு செய்தாலும் மனசாட்சியுடன் நடவடிக்கை எடுக்கக் கூடியவர். ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனாவைக் கட்டுப்படுத்தியவர். நிறையப் பேர் வாக்குறுதிகளைத் தருவார்கள். சொல்வார்கள் ஆனால் செய்ய மாட்டார்கள்.

ஆனால் நமது முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதிகளைத் தர மாட்டார். மக்களுக்கு என்ன தேவையோ அதை அறிந்து செய்யக் கூடியவர் முதல்வர். இதை யாரால் மறுக்க முடியும்?'' என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT