ஒரு நிமிட வாசிப்பு

தண்ணீர், மின்சாரமின்றி தவிக்கும் அமெரிக்காவின் டெக்சாஸ் மக்கள்

செய்திப்பிரிவு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத பனியின் காரணமாக தொடர்ந்து மூன்றாவது நாளாக மக்களுக்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தரப்பில், “ டெக்சாஸில் நிலவும் கடும் பனி காரணமாக வரலாற்றில் இல்லாத அளவு பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக சூரிய ஒளியை காணாத மக்கள் கடும் அவதியில் உள்ளனர்.

10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தண்ணீர் மற்றும் மின்சாரம் இன்றி தட்டுப்பாட்டை சந்தித்துள்ளனர். நிலைமை இவ்வார இறுதியில் சீராகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்துக்கு பனி கடுமையாக இருக்கும் என்று வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டெக்சாஸ் மட்டுமில்லாமல் ஹவுஸ்டனிலும் கடுமையான பனிப்பொழிவு நீடிப்பதால் அங்கு மின் பாதிப்பு நிலவுகிறது. டெக்சாஸ் மற்றும்ஹுஸ்டனில் ஏற்பட்ட பனி பொழிவுக்கு இதுவரை 20-க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

SCROLL FOR NEXT