ஒரு நிமிட வாசிப்பு

தமிழகத்தில் வகுப்புவாதம் காலூன்றவிடாமல் முறியடிப்போம்: தா.பாண்டியன்

சுப.ஜனநாயகச் செல்வம்

தமிழகத்தில் வகுப்புவாதம் காலூன்றவிடாமல் முறியடிப்போம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா.பாண்டியன் பேசினார்.

மதுரை வண்டியூரில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா.பாண்டியன் பேசியதாவது:

தமிழ்ச் சமூகத்தை சாகும் வரை என் நாவால் தட்டியெழுப்புவேன். எந்தக் கொம்பனாலும் என்னை அடக்க முடியாது. மதுரையில் பாடிப்புகழாதவர்கள் இல்லை. முதல், இடை, கடை சங்கம் கண்டது மதுரை.

பாரம்பரிய வரலாறு கொண்ட மதுரையில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்றிருப்பவர்கள் புடம்போட்டு எடுக்கப்பட்ட தங்கங்கள். வரப்போகும் தேர்தலில் நமது அணி வெற்றிப்பெறப்போகிறது. நம்மைத் தோற்கடிக்க யாராலும் முடியாது. நமக்கு சோதனைகள் வந்திருக்கிறது.

மத்திய அரசின் சட்ட விரோத செயல்களுக்கு முட்டுக்கொடுக்கும் செயலில் எடப்பாடி அரசு உள்ளது. வகுப்புவாதத்திற்கு முட்டுக்கொடுக்குகிறது எடப்பாடி அரசு. தமிழ் மண்ணையும் நாங்கள் அடிமையாக்க விடமாட்டோம். அதனை நாங்கள் மாற்றி அமைப்போம்.

தமிழகத்தில் வகுப்புவாதத்தை காலூன்ற விடாமல் முற்றாக முறியடிப்போம், தமிழகத்தில் பாஜக கால் மிதிக்க விடமாட்டோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT