அதிமுக அரசு தூக்கியெறியப்பட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியுள்ளார்.
மதுரை வண்டியூர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நேற்று நடந்தது.
இந்தக் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:
இந்த நாள் வரலாற்று சிறப்புக்குரிய நாள். வசதி வாய்ப்பற்ற குடும்பத்தில் பிறந்து முதல் பொதுவுடைமையாளராக திகழ்ந்த சிங்காரவேலர் பிறந்த தினம்.
கம்யூனிஸ்ட் தியாகிகளின் மதுரை மண்ணிலிருந்து பேசுகிறேன்.அன்றிருந்த கடுமையான அடக்குமுறை இன்று தலைதூக்கியிருக்கிறது. மனசாட்சியற்ற முறையில் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார் மோடி.
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான அரசாக மோடி அரசு உள்ளது. விமானங்கள், ரயில்கள் தனியாருக்கு சொந்தமாகியுள்ளன. முதலாளித்துவ கார்ப்பரேட் அரசாக மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்து முடித்துவிட்டார். அடிவருடி அரசியலை எடப்பாடி செய்து கொண்டிருக்கிறார்.
தமிழகத்திலோ கொள்ளையடிக்கும் அரசு ஆட்சியில் உள்ளது. அதிமுக அரசு தூக்கியெறியப்பட வேண்டும். அதற்கு நமது கூட்டணியை வலுவாக வைத்து வெற்றியைப் பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.