ஒரு நிமிட வாசிப்பு

புதுமணத் தம்பதிக்கு காஸ், பெட்ரோலைப் பரிசளித்த நண்பர்கள்

செய்திப்பிரிவு

திருமணத்தின் போது புதுமணத் தம்பதிக்கு காஸ், பெட்ரோலை நண்பர்கள் பரிசளித்ததால் மண்டபமே சிரிப்பலையில் மூழ்கியது.

சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகத் தொடர்ந்து 10-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதன்படி சென்னையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 30 பைசா இன்று உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் 1 லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.91.98-க்கு விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.85.31 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயலில் இன்று நடைபெற திருமணமொன்றில் புதுமணத் தம்பதிக்கு நண்பர்கள் காஸ் சிலிண்டர், பெட்ரோல் நிரப்பப்பட்ட கேன் ஆகியவற்றைப் பரிசாக அளித்தனர்.

அதேபோல சின்ன வெங்காயத்தின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கிலோ 150 ரூபாய்க்கு மேல் விற்பனை ஆவதால், வெங்காய மாலையும் மண மக்களுக்குப் பரிசாக அளிக்கப்பட்டது.

இவற்றைப் பரிசாக அளிப்பதன் மூலம் மண மக்களுக்கு சிக்கனத்தின் முக்கியத்துவத்தை உயர்த்துவதாக நண்பர்கள் கூறியதைத் தொடர்ந்து, மண்டபமே சிரிப்பலையில் மூழ்கியது.

SCROLL FOR NEXT