“அதிமுக தொண்டர்கள் ஒரு கையில் கொடியும் இன்னொரு கையில் தடியும் வெச்சுக்கணும்” - இதுபோன்ற தடலாடி பேச்சுகளால் அடிக்கடி தமிழகத்தையே தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைப்பவர் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. போகும் இடமெல்லாம் பொல்லாப்பாய் பேசியே பழகிவிட்ட கேடிஆரின் செல்வாக்கு சொந்தத் தொகுதியான சிவகாசியில் ஏகத்துக்கும் சரிந்து கிடக்கிறதாம்.
அதனால் இம்முறை, பக்கத்திலுள்ள ராஜபாளையத்துக்கு மாறிவிட நினைக்கிறாராம். ஒரு வருடம் முன்பாகவே இதற்கான பூர்வாங்க பணிகளைத் தொடங்கிவிட்ட கேடிஆர், ராஜபாளையம் தொகுதி அதிமுகவினருக்கு இம்முறை பொங்கல் பரிசையும் வஞ்சனையின்றி வாரி வழங்கி இருக்கிறாராம்.
இதனிடையே, சசிகலாவின் எதிரிகளை வீழ்த்துவதற்காக அய்யாவாடி பிரத்தியங்கரா கோயிலில் கேடிஆர் சிறப்பு யாகம் நடத்தியதாக சிண்டுமுடிந்து கொண்டிருக்கிறார்கள் அவரது அரசியல் ‘பங்காளிகள்.’
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.