ஒரு நிமிட வாசிப்பு

விவாகரத்துக்குப் புதிய சட்டம்: சீனர்கள் வருத்தம்

செய்திப்பிரிவு

சீனாவில் விவாகரத்து தொடர்பாகப் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதால் அங்கு விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சவுத் சீனா மார்னிங் போஸ்ட் வெளியிட்ட செய்தியில், ''சீனாவில் விவாகரத்துக்காக விண்ணப்பிக்கும் தம்பதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்த அரசு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தப் புதிய சட்டத்தின்படி, விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் தம்பதிகள் 30 நாட்கள் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும். முப்பது நாட்கள் முடிந்த பின்னர் மீண்டும் அதிகாரபூர்வமாக விவாகரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டம் காரணமாக சீனாவில் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் தம்பதிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

இந்தப் புதிய சட்டம் தங்களது வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கியுள்ளது என்றும், பிடிக்காத துணையுடன் இருப்பது எங்களது சுதந்திரத்தைப் பாதிக்கிறது என்றும் சீனர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இப்புதிய சட்டத்திற்கு சமூகச் செயற்பட்டாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT