காலநிலை மாற்றம் மற்றும் கரோனா குறித்து அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸும், பிரான்ஸ் அதிபர் மக்ரோனும் கலந்து ஆலோசித்தனர்.
இதுகுறித்து கமலா ஹாரிஸ் அலுவலகம் தரப்பில், “அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் காலநிலை மாற்றம் மற்றும் கரோனா குறித்து திங்கட்கிழமை தொலைபேசியில் உரையாடினர். மேலும், இந்த உரையாடலில் பிராந்தியத்தில் இரு நாடுகளும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா குறித்தும் ஆலோசனை நடத்தினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கத் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்ற பிறகு சர்வதேசத் தலைவருடன் அவர் நடத்திய முக்கிய உரையாடல் இதுவாகப் பார்க்கப்படுகிறது.