ரஷ்யாவில் தொடர்ந்து கரோனா பாதிப்பு குறைந்து வருவதாக அந்நாட்டு நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய நோய் தடுப்பு மையம் தரப்பில், “ ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,207 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனா பாதிப்பு 40,86,090 ஆக உள்ளது. ரஷ்யா கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே ரஷ்யாவில் 15 ஆயிரத்துக்கும் குறைவாகவே கரோனா பாதிப்பு ஏற்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ரஷ்யாவில் 35 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். டிசம்பர் மற்றும் ஜனவரியை ஒப்பிடுகையில் பாதிப்பு குறைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவில் கரோனாவை கட்டுப்படுத்த அந்நாட்டு மக்களுக்கு ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படுகிறது.