மதுரை வடக்குத் தொகுதி அதிமுக எம்எல்ஏ-வான முன்னாள் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா, இந்தமுறை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு குறி வைக்கிறார். எம்ஜிஆர் விசுவாசிகள் கணிசமாக உள்ள இந்தத் தொகுதியில் தானோ அல்லது தனது மகன் ராஜ் சத்யனோ களமிறங்கலாம் என்பது செல்லப்பா போட்டு வைத்திருக்கும் திட்டம்.
இந்தக் கனவை கலைக்கும் விதமாக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை இம்முறை திருப்பரங்குன்றத்தில் அமமுக வேட்பாளராக போட்டியிட தினகரனிடம் இப்போதே முன்பதிவு செய்துவைத்திருக்கிறாராம். ராஜ் சத்தியனோடு மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை அள்ளியவர் டேவிட் என்பதால், 'இம்முறையும் காலைவாரிவிடுவாரோ காளிமுத்து மகன்' என்று கதிகலங்கி நிற்கிறதாம் செல்லப்பா முகாம்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.