ஆப்கானிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் தலிபான்கள் 50 பேர் பலியாகி உள்ளனர்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில், “ நாவா மற்றும் கார்ம்சிர் பகுதிகளில் தலிபான்கள் மீது ஆப்கானிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் தலிபான்களின் இரு தளபதிகள் உட்பட 50 பேர் பலியாகினர்.
அவர்களது ஆயுதங்களும், வாகனங்களும் அளிக்கப்பட்டன” என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் காபூலில் தலிபான்கள் தாக்குதல் நடத்தின அதற்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து தலிபான்கள் தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், அவ்வப்போது ஆப்கன் அரசு கோரிக்கை விடுத்து வருகிறது.
மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையேயான பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் கத்தாரில் அமைதிப் பேச்சுவார்த்தை அமெரிக்கா தலைமையில் நடைபெற்றது. இதன் முடிவில் அமெரிக்கப் படைகள் சிறிது சிறிதாக ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. அவ்வப்போது குண்டு வெடிப்புச் சம்பங்களில் தாலிபான்கள் ஈடுபடுவதும் தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் இன்று குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது.