ஒரு நிமிட வாசிப்பு

திருச்செந்தூர் கோயிலில் ஸ்டாலின் மனைவி சுவாமி தரிசனம் 

ரெ.ஜாய்சன்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ தேர்தல் பிரச்சாரத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வந்தார்.

அவருடன் வந்த துர்கா ஸ்டாலின் இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்தார். பகலில் உச்சிகால தீபாராதனை ஆனதும் கோயிலுக்குள் சென்ற துர்கா ஸ்டாலின் சங்கல்பம் செய்து தரிசனம் செய்து வந்தார்.

மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, தட்சிணாமூர்த்தி சன்னதியில் வழிப்பட்ட துர்கா ஸ்டாலினுக்கு கோயில் பிரசாதரம் வழங்கப்பட்டது.

பின்னர் கோயில் பேட்டரி காரில் கிரி பிரகாரத்தில் வந்து கோயில் கலையரங்கம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி சென்றார். அவருடன் திமுக மகளிரணி நிர்வாகிகள் சிலரும் வந்திருந்தனர்

SCROLL FOR NEXT