சிவலிங்கங்களை வழிபட்ட பக்தர்கள்.  
ஒரு நிமிட வாசிப்பு

திருவானைக்காவல் கோயில் வளாகத்தில் பழமையான சிவலிங்கங்கள் கண்டெடுப்பு 

செய்திப்பிரிவு

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் இன்று புனரமைப்புப் பணியின்போது இரு பழமையான சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டன.

பஞ்சபூதத் தலங்களில் நீருக்குரிய தலமாக விளங்குவது திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள குபேர லிங்கேஸ்வரர் சன்னதி அருகே உள்ள சுற்றுச்சுவரை ஒட்டியிருந்த புதர்களை அகற்றியபோது, அந்த இடத்தில் 3 மற்றும் 2 அடிகளில் இரு பழமையான சிவலிங்கங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டு, வழிபட்டுச் சென்றனர்.

திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் இன்று கண்டெடுக்கப்பட்ட இரு சிவலிங்கங்கள்.
SCROLL FOR NEXT