கொலம்பியாவில் கரோனா பாதிப்பினால் ஏற்பட்ட உயிரிழப்பு 55,000-ஐக் கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
“கொலம்பியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 254 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவினால் பலியானவர்களின் எண்ணிக்கை 55,131 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் 9,790 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதுவரை 21 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலம்பியாவில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், பிப்ரவரி 28 வரை அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கரோனாவினால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் அமெரிக்கா முதலிடத்திலும், மெக்சிகோ இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன. தென் அமெரிக்க நாடுகளில் கொலம்பியாவில்தான் அதிகப்படியான கரோனா பலி ஏற்பட்டுள்ளது.