எகிப்தில் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் பழமையான மம்மி (பதப்படுத்தப்பட்ட உடல்) கண்டறியப்பட்டுள்ளது.
எகிப்தில் பண்டைய கால மம்மிகள் அவ்வப்போது கண்டறியப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் எகிப்தில் தங்க நாக்குடன் கூடிய மம்மி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கேத்லீன் மார்டினெஸ் தலைமையில் அடங்கிய குழு இந்த மம்மியைக் கண்டறிந்துள்ளது.
தங்க நாக்குடன் காணப்படும் இந்த மம்மி இறப்புக்குப் பின், ஒசைரிஸ் கடவுளின் நீதிமன்றத்தில் பேசுவதற்காக தங்கத்தாலான நாக்குடன் புதைக்கப்பட்டதாக தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒசைரிஸ் பாதாள உலகத்தின் அதிபதி என்றும், அவரே இறந்தவர்களுக்கான கடவுள் என்று எகிப்தியர்கள் நம்புகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.