ஒரு நிமிட வாசிப்பு

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி தென்காசியில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்

த.அசோக் குமார்

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் பாமக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் குமாரசாமி, அய்யம்பெருமாள், சேது அரிகரன், சண்முகவேல், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் சீதாராமன் வரவேற்றுப் பேசினார்.

மாவட்டத் தலைவர் குலாம், இளைஞரணி மாநிலச் செயலாளர் சாகுல் ஹமீது, துணைத் தலைவர் ராம்குமார் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அவர்கள், கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

SCROLL FOR NEXT