தொல்குடி தொடுவானம் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் மூலம், தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும் இணைந்து, பழங்குடி இளைஞர்கள் வாழ்வில் ஒளிவீசச் செய்துள்ளன.
வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி, கண்ணியமான பணிநியமன வாய்ப்புகளை உறுதி செய்யும் இத்திட்டம், இதுவரை 466 இளைஞர்களுக்கு நிலை யான எதிர்காலத்தை வழங்கியுள்ளது. 18 முதல் 33 வயதுக்குட்பட்ட 10, 12-ம்வகுப்பு. ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப வடிவமைக்கப்பட்ட பல்வேறு பயிற்சிகள், அவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுக்கிறது.
பணி நியமனம்: இந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக 2023-24 நிதியாண்டில் தொழில்துறை தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட கம்ப்யூட்டர் நியுமெரிக்கல் கன்ட்ரோல் (CNC) மற்றும் கஸ்டமர் ரிலேஷன்சிப் மேனேஜ்மென்ட் (CRM) பயிற்சிகள் நெட்டூர் தொழில்நுட்ப பயிற்சி அறக்கட்டளையில் (NTTF) வழங்கப்பட்டன. தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 146 இளைஞர்கள், பயிற்சிகளை வெற்றி கரமாக முடித்து,மாதம் ரூ.14,000 முதல் ரூ. 21,500 வரையிலான சம்பளத்தில் 10 நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டனர். இந்த இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்.
இதேபோல் இரண்டாம் கட்டமாக 2024-25 நிதியாண்டில் 29 மாவட்டங்களில் இருந்து சுமார் 3,141 இளைஞர்கள் கண்டறியப்பட்டனர். இம்முறை சிஎன்சி, வரைபட வடிவமைப்பு . இணையதள மேம்பாடு டேலி-ஜிஎஸ்டி உள்ளிட்ட 22 வகை யான் திறன் பயிற்சிகள், 14 புகழ்பெற்ற பயிற்சி வழங்குநர்கள் மூலம் 660 இளைஞர்களுக்கு வழங்கப்பட்டன. இப்பயிற்சிகளின் முடிவில், சுமார் 320 இளைஞர்கள் 27 நிறுவனங்களில் மாதம் ரூ.14,000 முதல் ரூ.24,000 வரையிலான ஊதியத்தில் பணி யமர்த்தப்பட்டனர்.
திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் பல்வேறு நிறுவனங்களில் பணீ வாய்ப்பு பெற்ற பழங்குடி இளைஞர்கள்.
3-ம் கட்ட பணிகள் தீவிரம்: இதனை தொடர்ந்து, மூன்றாம்கட்டப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி சுமார் 430-க்கும் மேற்பட்ட பழங்குடியின இளைஞர்களுக்கு தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்த அறிமுகம் மற்றும் வழிகாட்டுதல் முகாம் சேலத்தில் நடத்தப்பட்டது. விரைவில் இவர்களுக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழங்குடியினர் நலத்துறை, சுடர், சென்னை கிறித்தவக் கல்லூரியின் சமுதாயக் கல்லூரி, மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் போன்றஅமைப்புடன் இணைந்து இளைஞர்களின் ஆர்வத்தையும், தேவை களையும் கருத்தில் கொண்டு இந்த பயிற்சி நடைபெற்று வருகிறது. இத்திட்டம் வெறும் வேலைவாய்ப்பை வழங்கு வதோடு நின்றுவிடாமல், விளிம்பு நிலைமக்களிடம் தன்னம்பிக்கையை மேம் படுத்துகிறது. தொடர்ச்சியான திறன் பயிற்சிகள் மூலம், தமிழகத்தின் பழங்குடி இளைஞர்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரம் பெறுவதுடன். தலைமுறை மாற்றத்தை உருவாக்குகிறது பழங்குடியினர் நலத்துறை.
ஜோதிகா (ஈரோடு): 12-ஆம் வகுப்பு முடித்து வறுமையால் தினக்கூலி வேலைக்கு சென்றேன். இந்த பயிற்சி வாய்ப்பை அறிந்து அதில் சேர்ந்து என்எஸ்டிசி சான்றிதழ் பெற்றேன். என் தந்தையை இழந்த பிறகு, என் வருமானத்தால் குடும்பத்தை பாதுகாக்கிறேன். என்னைப் போலவே மேலும் 5 பேர் என்னுடன் பணிபுரிகின்றனர்.
மோனிஷா (காஞ்சிபுரம்): டிப்ளமோ படித்து முடித்த நிலையில் என்டிடிஎப் ஒருங்கிணைத்த திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்று, கேயுஎன் கேப்பிடல்ஸில் இணைந்து சிறந்தஊழியர் விருதை வென்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சதிஷ்குமார் (செங்கல்பட்டு): பிசிஏ படித்து முடித்து இப்பயிற்சியில் சேர்ந்து ஹெச்டிபி பைனான்ஸியல் சர்வீஸ்-ல் பணிபுரிய வாய்ப்பு கிடைத்ததுடன் தற்போது திறனை வளர்த்துக் கொண்டு, அதிக சம்பளத்துக்கு பெரிய தனியார் பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்கிறேன்.