வர்த்தக உலகம்

சென்னையில் மே 30-ல் ‘பெண்கள் பலம் வாழ்வாதாரம்’ சிறப்பு நிகழ்வு

இந்து தமிழ் திசை - கனரா ரோபேகோ மியூச்சுவல் ஃபண்ட் வழங்கும் நிகழ்ச்சி

செய்திப்பிரிவு

பல்வேறு துறைகளிலும் ஆர்வத்துடன் இருப்பவர்களுக்கு வழிகாட்டும் வகையில் சிறப்புமிக்க பல நிகழ்வுகளை கள அளவில் 'இந்து தமிழ் திசை' நாளிதழ், தொடர்ந்து நடத்தி வருகிறது.

தற்போது கனரா ரோபேகோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துடன் இணைந்து 'பெண்கள் பலம் வாழ்வாதாரம்' எனும் பெண்களுக்கான பொருளாதார முன்னேற்றத்தை வலியுறுத்தும் நோக்கிலான சிறப்பு நிகழ்வை சென்னையில் மே 30ம் தேதி (சனிக் கிழமை) மாலை 4 மணிக்கு நடத்துகிறது.

சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையிலுள்ள சவேரா ஹோட்டல் சமவேஷ் அரங்கில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், சேமிப்பில் எப்படி முதலீடு செய்வது, அதன் மூலமாக பெண்கள் பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான ஆலோசனைகளும் உரிய வழிமுறைகளும் வழங்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோர் பாங்கிங் சேனல் & இன்ஸ்டிடியூஷனல் சேல்ஸ் நேசனல் ஹெட் கே.கோபி நாத், பொருளாதார நிபுணர் சோம.வள்ளியப்பன் ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.

கோபி நாத் | சோம. வள்ளியப்பன்

மாலை 4 மணிக்கு தேநீர் விருந்தோடு தொடங்கும் இந்நிகழ்வுக்கான அனுமதி இலவசம். இந்த நிகழ்வில் பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள அனைத்து வயதினரும் பங்கேற்று பயன்பெறலாம்.

சிறப்பு நிகழ்வில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் இத்துடன் உள்ள கியூஆர் கோடு மூலமாக பதிவு செய்து பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களைப் பெற 99440 29700 என்ற எண்ணில் அழைக்கலாம்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT