சென்னை: செப்டம்பர் 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை சென்னையில் இசை, நடன திருவிழா நடைபெற உள்ளது. லைவ் பார் யூ சார்பில் சென்னை எழும்பூர் மியூசிக் தியேட்டரில் செப்டம்பர் 14 முதல் 17-ம் தேதி வரை “லைவ் பார் யூ ஸ்கையர்ஸ்ரஸ் ஜோதிர்கமயா சீரிஸ்” இசை, நடன திருவிழா நடைபெற உள்ளது.
தினமும் மாலை 3 முதல் இரவு 8.30 மணி வரை மெழுகுவர்த்திகள் மற்றும் தீபங்களுக்கிடையே ஒலிக்கும் மயக்கும் ஒளியுடன் நிகழ்ச்சிகள் நடைபெறும். கர்னாடக இசை உலகின் இரட்டையர்கள் ரஞ்சனி, காயத்ரி சகோதரிகளின் சிறப்பு இசைக் கச்சேரி இடம் பெறுகிறது. கர்னாடக இசைக் கலைஞர் சிக்கில் குருச்சரண், பியானோ இசைக் கலைஞர் அனில் ஸ்ரீநிவாஸன் இணைந்து சிறப்பு கச்சேரியை நடத்த உள்ளனர்.
இளம் இசைக் கலைஞர் ராமகிருஷ்ண மூர்த்தியின் கர்நாடக இசைக் கச்சேரி நிகழ்ச்சியை அலங்கரிக்க உள்ளது. மேலும் அனிதா குஹா பரதஞ்சலி குழுவின் சார்பில் சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி அரங்கேற்றம் செய்யப்பட உள்ளது. இவர்கள் தவிர பிரபல இசைக் கலைஞர்கள், நடன கலைஞர்களின் 8 சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன.
செப்.14 முதல் 17 வரை ஒவ்வொரு நாள் மாலைப் பொழுதையும் இசை, நடனம், கதை சொல்லுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அலங்கரிக்க உள்ளன. மனதை மயக்கும் கர்னாடக இசை ராகங்கள் முதல் பரவசமாக்கும் பரத நாட்டியம் வரை இடம்பெறும் ஜோதிர்கமயா சீரிஸின் பங்குதாரராக இந்து தமிழ் திசை இணைந்திருக்கிறது.
டிக்கெட் முன்பதிவுக்கு: https://mdnd.in/SeasonTickets/OrganizerLandingPage?ci=101&r_id=29790 | https://kynhood.com/eventcategory/Jyotirgamaya
99405 09548 (பிரகாஷ்) என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.