சென்னை: இந்தியா முழுவதிலும் உள்ள சிறந்த கல்வி மற்றும் நிதி நிறுவனங்கள் இதில் பங்கேற்கவுள்ளன. மேலும் இத்துறை சார்ந்த சிறந்த வல்லுநர்கள் மூலம் வழிகாட்டுதல்களைப் பெற முடியும். பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு தற்போது அதிகமான விருப்பத் தேர்வுகள் உள்ளன. மாணவர்களுக்கு பல்வேறு பிரிவுகள் குறித்த நுண்ணறிவைப் பெறச் செய்வதையும், சிறந்த கல்வி வாய்ப்பை பெறச் செய்வதையும் இக்கண்காட்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
போட்டி தேர்வுக்கு வழிகாட்டுதல்: விளையாட்டு மேலாண்மை முதல் செயற்கை நுண்ணறிவு வரையிலான வளர்ந்து வரும் பல்வேறு படிப்புகள், துறைகள் குறித்த விவரங்களை 2 நாள் கண்காட்சியில் பெறமுடியும். மேலும் உயர்கல்வியில் வளர்ந்து வரும் போக்குகள், போட்டித் தேர்வுகளில் திறம்பட வெற்றி பெறுதல் ஆகியவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
கடந்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற முந்தைய பதிப்பில் தேசியமற்றும் சர்வதேச பல்கலைக்கழக பிரதிநிதிகளுடன் மாணவர்கள் உரையாடி பல்வேறு வாய்ப்புகளை ஆராய வாய்ப்பு வழங்கப்பட்டது. மாணவர்கள் தேவைக்கு ஏற்ப இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உயர்கல்வியைத் தொடரவும் இக்கண்காட்சியில் உதவி வழங்கப்படுகிறது.
நிபுணர்கள் விளக்கம்: பெங்களூரு யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மைய விஞ்ஞானி மற்றும் இயக்குநர் எம்.சங்கரன் கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறார். இந்துஸ்தான் தொழில்நுட்ப அறிவியல் நிறுவன சார்பு துணைவேந்தர் ஆர்.டபிள்யு.அலெக்சாண்டர் ஜேசுதாசன் கவுரவ விருந்தினராகப் பங்கேற்கிறார். பல்வேறு துறை படிப்புகள் குறித்து நிபுணர்கள் விளக்குகின்றனர்.
கண்காட்சியில் பங்கேற்கும் மாணவர்கள் உடனடி சேர்க்கை, கல்வி உதவித் தொகை பெற முடியும். இரு நாட்களிலும் முதலில் வரும் 200 பேருக்கு ஆச்சரியமான பரிசுகளும் காத்திருக்கின்றன.
தொழில் ஆலோசனை கண்காட்சி இந்துஸ்தான் குழும நிறுவனங்களால் நடத்தப்படுகிறது. அமெட் பல்கலை., பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரெசன்ட் அறிவியல்