தமிழ்நாடு வனஉரிமைச் சட்டத்துக்கான வரைபடத் தொகுப்பை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு வெளியிட்டார்.

 
வர்த்தக உலகம்

வன உரிமைச் சட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த தமிழக அரசு தீவிரம்

தமிழ்நாடு வனஉரிமைச் சட்டம் வரைப்படத் தொகுப்பு மற்றும் மின்னணுமயமாக்குதல் - ஒரு புதிய மைல்கல்

Sponsored Content

இந்தியாவில் வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் நில உரிமையை உறுதி செய்ய, 2006-ம்ஆண்டு “பழங்குடியினர் மற்றும் பிற மரபு வழியாக வனம் சார்ந்து வாழ்வோர் (வனஉரிமைகளை அங்கீகரித்தல்) சட்டம்- 2006-ன்படி வனஉரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இச்சட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி புவிசார் தகவல் அமைப்பு மற்றும் செயற்கைக்கோள் வரைபடத் தரவுகள், 2011 கணக்கெடுப்பை பயன்படுத்தி “தமிழ்நாடு வனஉரிமைச் சட்டத்துக்கான வரைபடத் தொகுப்பு”தயாரிக்கப்பட்டது.

          

இதனை கடந்த ஆண்டு ஏப் 14-ம் தேதி முதல்வர் வெளியிட்டார். இதன்மூலம் வனப் பகுதிகளில் வசித்து வந்த 1,986 பழங்குடியின கிராமங்களின் வன உரிமைகளை அங்கீகரிப்பதற்கான தரவுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இச்சட்ட அமலாக்கத்தில், நன்கு பயிற்சி பெற்ற சிறந்த பழங்குடியின வல்லுநர்களைக் கொண்டு வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவை தமிழில் தொகுக்கப்பட்டன.

இதனை கடந்த ஆண்டு பிப்.6 அன்று தலைமைச் செயலாளர் வெளியிட்டார். மேலும், திட்ட அமலாக்கத்தை துல்லியமாகக் கண்காணிக்கப் பிரத்யேகமான இணைய தளம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த டிஜிட்டல் கண்காணிப்பு முறை, மனுக்களின் மீதான விரைந்த நடவடிக்கைக்கு வழிவகை செய்கிறது.

வன உரிமைக் குழுமற்றும் கிராம சபை உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்.

பயிற்சிப் பட்டறைகள்

வன உரிமைச்சட்ட அமலாக்கத்துக்காக, நிபுணத்துவம் பெற்ற பயிற்சியாளர்களைக் கொண்டு மாவட்ட வன அலுவலர்கள் முதல் கிராம நிர்வாக அலுவலர்கள் வரையிலான 1,766 அரசு அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதேபோல் கோட்ட மற்றும் மாவட்ட அளவிலான வனஉரிமைக் குழுக்களின் அனைத்து உறுப்பினர் களுக்கும் பலகட்டப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

வன உரிமைக் குழுக்கள்

பல்வேறு தரவுகளின் அடிப்படையில், 21 மாவட்டங்களில் உள்ள 1,575-க்கும் மேற்பட்ட வன உரிமை கிராம சபைகள் ஒருங்கிணைக்கப்பட்டன. இதில் ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்த கிராம சபைகளுடன், புதிய கிராம சபைகளும் முறையாகக் கூட்டப்பட்டு, அவற்றின்கீழ் வன உரிமைக் குழுக்களை புதிதாக அமைத்தும் மறுசீரமைக்கப்பட்டும் உள்ளன.

திருவண்ணாமலை மாவட்ட கீழ்பாலங்கோட்டை கிராமத்தில் நடந்த கள ஆய்வு மற்றும் நில அளவைப் பணிகள்.

இந்த குழுக்களில் தலா 15 உறுப்பினர்கள் வீதம் மொத்தம் 23,625 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் சட்ட விதிகளின்படி, மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 7,875 பெண் உறுப்பினர்கள் இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டது. இவ்வாறாக அமைக்கப்பட்ட அனைத்து வனஉரிமைக் குழு உறுப்பினர்களுக்கும் முறையான நேரடிப் பயிற்சிகள் விரிவாக அளிக்கப்பட்டன.

இச்சட்டத்தை விரைந்து அமல்படுத்தும் வகையில் 18 மாவட்டங்களில், கோட்ட அளவில் 27 தனிப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பிரிவுகளில் பழங்குடியின சமுதாயத்தைச் சார்ந்த 73 பட்டதாரி இளைஞர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தருமபுரியில் கள ஆய்வுப் மற்றும் நில அளவைப் பணியில் ஈடுபட்ட வன உரிமைக்குழு.

இவர்களுடன் 20 பழங்குடியின முதன்மைப் பயிற்சியாளர்கள் மற்றும் வன உரிமைக் குழு உறுப்பினர்கள் இணைந்து, ஒவ்வொரு குடும்பத்தையும் சந்தித்து, 31,110 உரிமைக் கோரல் படிவங்களை சேகரித்தனர்.

இதுவரை 15,680 நில உரிமைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பெறப்பட்டுள்ள 31,110 புதிய விண்ணப் பங்கள் மீது தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பழங்குடியின நலத்துறையை ஒருங்கிணைப்புத் துறையாகக் கொண்டு, மாவட்ட ஆட்சியரின் நேரடி மேற்பார்வையில் ஒவ்வொரு கிராம சபையிலும் வருவாய்த் துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் இணைந்து, மக்கள் பங்களிப்புடன் களஆய்வு மற்றும் நில அளவைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT