Hindu Tamil Thisai - Shankar IAS Academy - Alapiranthome Events - UPSC, TNPSC Exam 
வர்த்தக உலகம்

‘இந்து தமிழ் திசை’, சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ‘ஆளப் பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சி சென்னையில் வரும் ஞாயிறு காலை நடைபெறுகிறது - யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர் பங்கேற்கலாம்

செய்திப்பிரிவு

சென்னை

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து வழங்கும் ‘ஆளப் பிறந்தோம்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி வரும் ஞாயிறு (மே 29) காலை 9 மணிக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலுள்ள விவேகானந்தா அரங்கில் நடைபெற உள்ளது.

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், அதற்கான அடிப்படைத் தேவையான கல்வித் தகுதி என்ன, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், அதிக செலவு ஆகுமா என ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம்.

அவ்வாறான தயக்கத்தைப் போக்கி, இத்தேர்வுகளுக்கு படிப்பதற்கான தெளிவைத் தரும் நோக்கில் ‘ஆளப் பிறந்தோம்’ என்ற நிகழ்ச்சி வரும் ஞாயிறு காலை சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலுள்ள விவேகானந்தா அரங்கில் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில், ‘இல்லம் தேடி கல்வி’ திட்ட சிறப்புப் பணி அதிகாரி க.இளம்பகவத், ஐஏஎஸ்., மாநில திட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், ‘இந்து தமிழ் திசை’ முதன்மை உதவி ஆசிரியர் செல்வ.புவியரசன், சங்கர் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையாற்ற உள்ளனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்புபவர்கள் http://www.htamil.org/00605 என்ற லிங்கில் பதிவுசெய்து கொள்ளவும். இதில் பங்கேற்கும் அனைவருக்கும் ‘தேர்வுக்கு வழிகாட்டி’ நூலும், பாடத்திட்டக் குறிப்புகளும் இலவசமாக வழங்கப்படவுள்ளன.


நிகழ்வில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு ’இந்து தமிழ் திசை’ வெளியீடான இயர்புக் - 2022 - ரூ.275 மதிப்புள்ள புத்தகம் சிறப்புச் சலுகை விலையில் ரூ.200-க்கு கிடைக்கும். இயர்புக் 2021 + 2022 = ரூ.525 மதிப்புள்ள புத்தகங்கள் காம்போ சலுகையில் ரூ375/-க்கே கிடைக்கும். ஆன்லைனில் ஆர்டர் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்... https://store.hindutamil.in/publications

SCROLL FOR NEXT