Innovative woman celebrating Tanishq 
வர்த்தக உலகம்

தனிஷ்க் கொண்டாடும் புதுமைப் பெண்

செய்திப்பிரிவு

பாரம்பரியம் மிக்க டாடா குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள புதுமைப் பெண்களை உலகத்துக்கு வெளிச்சமிட்டுக் காட்டும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

தங்களைப் புதுமைப் பெண்ணாக அடையாளப்படுத்த முன்வரும் பெண்கள் தங்கள் கதையைப் பகிர்ந்துகொள்ள தனிஷ்க் அழைக்கிறது. தங்களைப் பற்றியோ தாங்கள் அறிந்த வேறு புதுமைப் பெண்களைப் பற்றியோ ‘இந்து தமிழ் திசை’யோடு இணைந்து மேற்கொள்ளும் இந்த முன்னெடுப்பின் மூலம் பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம்.

தனிஷ்க் அடையாளப்படுத்தும் புதுமைப் பெண்களில் சில முகங்கள் இதோ...

யுவராணி :


தனது தொழில் கனவை நனவாக்குவதற்காக சமூக எதிர்பார்ப்பு சார்ந்த கட்டமைப்புகளை உடைத்தவர்.

நகை பராமரிப்பு, இயந்திரங்களைக் கையாள்தல் ஆகியவற்றைத் தனது தொழில் வாழ்வை அமைத்துக்கொண்டு ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த தொழில்துறையில் வெற்றிகரமாக உருவெடுத்ததன் மூலம் சமூக எதிர்பார்ப்பு சார்ந்த கட்டமைப்புகளை உடைத்திருக்கிறார் யுவராணி.

ரதி எட்வின் :


தனிப்பட்ட ஆளுமை வளர்ச்சியை நம்புகிறவர், கனவுகாண்பவர் , சாதனையாளர்.

தனக்குள்ளிருந்தே வலிமையைப் பெற்று தனக்கென்று ஒரு வெற்றிகரமான தொழில் வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டிருகிறார் ரதி. பாலினம் சார்ந்த கட்டமைப்புகளுக்கு சவால்விடும் இவருடைய திறன்தான் அனைத்து விதிமுறைகளையும் மீறி தனக்கு பிடித்த பாதையை வடிவமைத்துக்கொள்ள வைத்துள்ளது.

ஷர்மிளா.பி :


பிறர் வாழ்வில் அன்பு, அக்கறையின் பேரொளியைப் படரச் செய்கிறவர்.

தான் செய்யும் அனைத்து விஷயங்களிலும் தன்னைச் சுற்றி அன்பையும் நேர்மறைத்தன்மையையும் பரப்ப முயல்கிறார் ஷர்மிளா. நிபந்தனையின்றி பிறர் மீது அக்கறை செலுத்தும் குணமே இவருடைய அன்புக்குச் சொந்தமானவர்களின் வாழ்வில் அவரை பின்பற்றத்தக்க முன்மாதிரி ஆக்குகிறது.

காயத்ரி ஹரிராஜா :

தனது கனவுகளை நனவாக்க அச்சமின்றி சவால்களை வெல்கிறவர்.

தானே உருவாக்கிக்கொண்ட தொழில் வாழ்க்கையின் மூலம், எத்தகைய தடைகளையும் தாண்டி ஒருவரால் வெற்றிபெற முடியும் என்று நிரூபித்திருக்கிறார் காயத்ரி. தன் சொந்த முயற்சியால் மேலாண்மையில் பட்டம் பெற்றிருக்கும் இவர் தற்போது ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கு உதவுவதன் மூலம் அவர்களின் வாழ்வில் ஒளியேற்றிக்கொண்டிருக்கிறார்.

பாரதியார் உருவாக்கிய ‘புதுமைப் பெண்’ என்கிற தத்துவம் தனிஷ்க்-கின் உத்வேகம். இன்றைய புதுமைப் பெண்கள் பாரம்பரியத்துக்கு உயிர் கொடுப்பதுடன் புதுமையின் ஒளியையும் ஏற்றுகிறார்கள். தமிழ் கலாச்சாரத்தை ஒளிரச் செய்யும் இந்தப் புதுமைப் பெண்களை தனிஷ்க் கொண்டாட விரும்புகிறது.

நீங்கள் ஒரு புதுமைப் பெண்ணாகவோ அப்படி ஒருவரை உங்களுக்குத் தெரிந்திருந்தாலோ அந்தக் கதையை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மேலும் பல புதுமைப் பெண் கதைகளைப் பார்க்க:

SCROLL FOR NEXT