மற்ற 4G நெட்வொர்க்கை விட விரைவான 4G நெட்வொர்க்கை தேர்ந்தெடுப்பதன் அவசியம்...
கடந்த ஓராண்டில் உலகமே தலைகீழாக மாறிவிட்டது. பெருந்தொற்று பேரிடர் ஏற்பட்ட காரணத்தால், நாம் அனைவரும் முன்பை விட அதிக அளவில் ஃபோனிலேயே இன்டர்நெட் சேவை பெறுவதில் கவனம் செலுத்தி வருகிறோம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும், மெதுவான இன்டர்நெட் சேவையால், ஆன்லைனில் எதுவும் உடனே பெற முடியாமல் நாம் அவதிப்பட்டு வந்தோம். மெதுவான அல்லது அதிக வேகம் இல்லாத இன்டர்நெட் சேவை என்பது நமக்கு நேர விரயம் ஏற்படுத்தி, நமது செயல்பாட்டுத் திறனை பாதித்து விடுகிறது. இழுபறியான நிதி பரிவர்த்தனை தொந்தரவுகள், டேட்டா டவுன்லோட் செய்வதில் தாமதம், பிசினஸ்க்கு இடையூறு, என பல விதங்களில் இது நம்மை பாதிப்பதால், நமது பெயர், நம் மேல் உள்ள நம்பிக்கை பாதிக்கப்பட்டு, நேரத்தைச் சரியான முறையில் பயன்படுத்தாமல் வீணடித்தோம் என்ற குற்ற உணர்வும் ஏற்படும்.
லாக்டவுன் காரணமாக, நம் அனைவருக்குமே மன அழுத்தம் மிகவும் அதிகரித்திருந்தது. மெதுவான இன்டர்நெட் சேவை நமது வாழ்வை மிகவும் பாதித்தது. திட்டங்கள் சமர்ப்பிப்பதில் தாமதம், ஆன்லைன் கிளாஸ்களில் இடையூறு மற்றும் வேலைநேர மீட்டிங்கில் பாதிப்பு போன்றவற்றை ஏற்படுத்தி நமது மன அழுத்தத்தை மேலும் பன்மடங்கு உயர்த்தியது என்றால் அது மிகையல்ல.
ஆனால், தற்போது டிஜிட்டல்மயம் அதிகரித்து வருவதால், நாம் வாழ்க்கையை புதிய கோணத்தில் பார்க்க தொடங்கியுள்ளதோடு, ஆன்லைன் சேவைகளை அதிக எதிர்பார்க்கிறோம். இன்றைய மாறிவரும் உலகில், ஒரு மிக விரைவான இன்டர்நெட் சேவை என்பது அடிப்படையான தேவையாகி நமது வேலையை சிறந்த முறையில் செய்ய உதவுவதோடு, நேர-விரயம் ஏற்படாமல் தவிர்க்கவும் வழிவகுக்கிறது. எனவே, நாம் எங்கிருந்தும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இயங்க முடிகிறது.
எங்கிருந்தும் வேலை செய்வதற்கும், புதியவற்றை கற்பதற்கும், வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கும், பயணம் செய்வதற்கும், பிறரை தொடர்புகொள்வதற்கும்; இப்படி அனைத்திற்குமே நாம் நமது நெட்வொர்க் சேவையை பெரிதும் சார்ந்திருக்கிறோம். இவை அனைத்தையும் சிறந்த முறையில் செய்வதற்கு விரிவான, மேன்மையான நெட்வொர்க் ஆக விரைவான 4G சேவை அவசியமாகிறது. அதன்மூலம், வீடியோ அழைப்புகள், மீட்டிங்குகள், ஆன்லைன் தொடர்கள் மற்றும் படங்கள் பார்ப்பது, போன்ற பலவற்றை தடையின்றி நாம் செய்ய முடியும்.
செயல்படலாம் - ஸ்மார்ட்டாக, விரைவாக & சிறப்பாக
உங்களிடம் விரைவான 4G இருக்கும்பட்சத்தில், உங்களால் வேலை மற்றும் பிற விஷயங்களை விரைவாக, உடனடியாக, சிறந்த முறையில் சுலபமாக, தடையின்றி நினைத்த நேரத்தில் செய்து முடிக்க முடியும். இவை அனைத்தும் உங்களை திருப்தி செய்வதோடு, நேரத்தை தேவைக்கேற்ப பயன்படுத்தி, உங்கள் விருப்பம்போல் வாழ்வில் செயல்பட வழிவகுக்கிறது.
Vi, இந்தியாவின் விரைவான 4G சேவையாக உருவெடுத்துள்ளது என்று உலகளாவிய நெட்வொர்க் வேகத்தை பரிசோதனை செய்யும் ஓக்லா தெரிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள Q3 & அத்துடன் Q4 2020 அறிக்கைகளில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவின் மிக வேகமான 4G டவுன்லோட் மற்றும் அப்லோட் உள்ள நெட்வொர்க்குடன், உங்கள் வேலைக்கும், ஆன்லைனில் நீங்கள் செய்ய விரும்பும் அனைத்திற்கும் உறுதுணை.