Hindu Tamil Year Book 2021 
வர்த்தக உலகம்

‘இந்து தமிழ்’ இயர்புக் 2021 - ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட தேசிய போட்டித் தேர்வுகள், டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட மாநில போட்டித் தேர்வுகள், உயர்கல்வி படிக்க விரும்புபவர்கள் உள்ளிட்டோருக்கு உதவுவதற்கான முழுமையான கையேடு

செய்திப்பிரிவு

‘இந்து தமிழ்’ நாளிதழ் சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘இயர்புக்’ வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்றது. ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட தேசிய போட்டித் தேர்வுகள், டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட மாநில போட்டித் தேர்வுகள், உயர்கல்வி படிக்க விரும்புபவர்கள் உள்ளிட்டோருக்கு உதவுவதற்கான முழுமையாக கையேடாக இந்த இயர்புக் தயாரிக்கப்பட்டுவருகிறது.

2021 இயர்புக்கில் உலகிலும் மக்கள் வாழ்க்கையிலும் கரோனா வைரஸ் செலுத்திய தாக்கம், அதன் மருத்துவப் பின்னணி குறித்து விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரலாறு, புதிய கல்விக்கொள்கை 2020, இந்தியா - சீனா மோதல், இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றி எழுதிய முன்னோடி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், 60 வரலாற்று ஆளுமைகள், இந்திய மாநிலங்களின் புவியியல் தொடர்பான அம்சங்கள் குறித்த சிறப்புக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணிக் கட்டுரையாளர்களும் தேர்ந்த ஆசிரியர்களும் இந்தப் புத்தகத்துக்குப் பங்களித்துள்ளனர்.

நிகழ்வுகள் (Current Affairs), போட்டித் தேர்வு, அறிவியல், சுற்றுச்சூழல், வரலாறு, கலை-பண்பாடு, தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில் விரிவான கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

கல்லூரி - பள்ளி மாணவர்களுக்கு இந்தப் புத்தகம் ஆண்டு முழுவதும் கைகொடுக்கும். இந்தப் புத்தகத்தை வாங்கிப் பயனடையுமாறும் மாணவர்கள், ஆசிரியர்களுக்குப் பரிந்துரைக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

SCROLL FOR NEXT