வர்த்தக உலகம்

விளையாட்டாய் சில கதைகள்: இவர்கள் அப்பா ஆனபோது...

பி.எம்.சுதிர்

தன் மனைவி அனுஷ்காவுக்கு குழந்தை பிறக்க உள்ளதால் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை பாதியிலேயே நிறுத்தி திரும்பவுள்ளார் விராட் கோலி. இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தங்களுக்கு குழந்தை பிறக்கும் நேரத்தில் மற்ற வீரர்கள் என்ன செய்தார்கள் என்பதைப் பார்ப்போம்:

தோனிக்கு குழந்தை பிறந்தபோது அவர் மனைவியின் அனுமதியைப் பெற்று ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடரில் ஆடிக்கொண்டு இருந்தார். மகள் பிறந்த தகவலை சொல்ல குடும்பத்தினர் முயன்றபோது தோனியை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை. பின்னர் ரெய்னா மூலமாக அவருக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள். குழந்தையைப் பார்க்கச் செல்லவில்லையா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நான் இப்போது நாட்டுக்கான பணியில் இருக்கிறேன். குழந்தையை பிறகு பார்த்துக்கொள்ளலாம். உலகக் கோப்பைதான் முக்கியம்” என்றார். உலகக் கோப்பை தொடரை முடித்த பின்பே அவர் இந்தியா திரும்பினார்.

1976-ல் கவாஸ்கருக்கு குழந்தை பிறந்தபோது அவர் மேற்கிந்திய தீவுகளில் கிரிக்கெட் ஆடிக்கொண்டு இருந்தார். அவரும் விடுப்பு எடுக்காமல் இந்திய அணிக்காக ஆட்டத்தை தொடர்ந்தார். இந்த நிலையில் ஜமைக்காவில் நடந்த டெஸ்ட்டில் மேற்கிந்திய அணியின் பந்துவீச்சால், 5 இந்திய பேட்ஸ்மேன்கள் காயமடைந்தனர். அப்போது சக வீரரான கெய்க்வாட்டிடம், “நான் இங்கு சாக விரும்பவில்லை. ஊருக்குச் சென்று மகனைக் காண விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார். மகன் பிறந்து இரண்டரை மாதங்களுக்கு பிறகே கவாஸ்கரால் இந்தியாவுக்கு திரும்ப முடிந்தது.

2001-ம் ஆண்டில் மகள் பிறந்த சமயத்தில் தென் ஆப்பிரிக்க தொடரில் இந்திய அணியை வழிநடத்திக் கொண்டிருந்தார் சவுரவ் கங்குலி. ஒரு மாதத்துக்கு பிறகே அவர் குழந்தையைப் பார்த்தார்.

SCROLL FOR NEXT