சென்னை
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து வழங்கும் ‘ஆளப் பிறந்தோம்’ எனும் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான ஆன்லைன் வழிகாட்டு நிகழ்ச்சி இன்று (நவம்பர்-22, ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றிபெற வேண்டுமென்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், அதற்கான அடிப்படைத் தேவையான கல்வித் தகுதி என்ன, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், அதிக செலவாகுமா என ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம். அவ்வாறான தயக்கத்தைப் போக்கும் வகையில், இந்தத் தேர்வுகளுக்குப் படிப்பதற்கான தெளிவைத் தரும் நோக்கில் ‘ஆளப் பிறந்தோம்’ என்ற ஆன்லைன் வழிகாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளும், யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகும் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறப்பு பணிப்படை கூடுதல் டிஜிபி டாக்டர் எம்.ரவி, ஐபிஎஸ், அஸ்ஸாம் கழிரங்கா தேசியப் பூங்காவின் வன உதவி கன்சர்வேட்டர் பி.பிறைசூடன், ஐஎஃப்எஸ், சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையாற்ற இருக்கிறார்கள். காலை 10.30 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்ச்சி மதியம் ஒரு மணிவரை நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்வமுள்ள அனைவருக்கும் பங்கேற்கலாம். பதிவுக் கட்டணம் ஏதுமில்லை. இந்த நிகழ்வில் பங்குபெற இங்கே க்ளிக் செய்து பதிவு செய்யலாம்.