Spiro - Hindu Tamil Thisai uyarvukku uyar kalvi online events 
வர்த்தக உலகம்

‘ஸ்பைரோ’ உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘நீட் மெடிக்கல் கவுன்சிலீங்-2020’ ஆன்லைன் கருத்துப் பகிர்வு, வழிகாட்டி நிகழ்ச்சி வரும் ஞாயிறு (நவ.8) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது

செய்திப்பிரிவு

சென்னை

‘ஸ்பைரோ பிரைம் எஜிகேஷன் இன்ஸ்டிடியூட்’ உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’யில் வரும் ஞாயிறன்று (நவம்பர் 8) காலை 11 மணிக்கு நீட் மெடிக்கல் கவுன்சிலீங் தொடர்பான ஆன்லைன் கருத்துப் பகிர்வு மற்றும் வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

மெடிக்கல் சேர்க்கைக்கான நீட் தேர்வு நடைபெற்று, அதற்கான மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. நீட் தேர்வில் பெற்றுள்ள கட்-ஆஃப் மதிப்பெண், தர வரிசை, கல்லூரி தேர்வு அடிப்படையில் மெடிக்கல் ஆன்லைன் கவுன்சிலீங் குறித்து மாணவ, மாணவிகளின் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கிலும், அவர்களுக்கு ஆன்லைன் கவுன்சிலீங் குறித்து வழிகாட்டும் வகையிலும் ‘ஸ்பைரோ பிரைம் எஜிகேஷன் இன்ஸ்டிடியூட்’ உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘உயர்வுக்கு உயர்கல்வி’ எனும் நீட் மெடிக்கல் கவுன்சிலீங் ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்துகிறது.

வரும் ஞாயிறு காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தருமான டாக்டர் எஸ்.கீதாலெட்சுமி, சென்னை அண்ட் நாமக்கல் ஸ்பைரோ இன்ஸ்டிடியூசன்ஸ் கல்வியாளர் எஸ்.எம்.உதயகுமார் ஆகியோர் பங்கேற்று பயனுள்ள வழிகாட்டுதலை வழங்கவிருக்கிறார்கள். இதில் பங்கேற்க கட்டணம் ஏதுமில்லை. அனைவரும் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்பும் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் https://bit.ly/329GQyE, https://bit.ly/3elCnO6 என்ற இணையதளங்களில் பதிவு செய்துகொள்ளவும்.

SCROLL FOR NEXT