சமூக நீதியையும், அனைவருக்கும் சமமான வாழ்க்கைத் தரத்தையும் உறுதி செய்வதே ஒரு மக்கள் நல அரசின் தலையாய கடமையாகும். அந்த இலக்கை நோக்கிய பயணத்தில், தமிழக அரசு பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தி வரும் "தொல்குடி" திட்டம் ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பழங்குடி மக்களின் மிக அடிப்படைத் தேவையான பாதுகாப் பான, நிரந்தரமான வீடுகள் அமைத்துத் தரப் படுகின்றன. இப்பணியை தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஏற்றுக்கொண்டுள்ளது. 1979 வரை ஆதி திராவிடர் மக்களுக்கு இலவச வீடுகளைக் கட்டித் தந்தது. 45 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் பழங்குடியினருக்கான வீட்டு வசதித் திட்டத்தை, தொல்குடி திட்டத்தின் கீழ் தாட்கோ முன்னெடுத்துள்ளது.
பழங்குடி மக்களுக்கான வீடுகளின் தரத்தையும் மேம்பாட்டையும் உறுதி செய்வதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம். கட்டுமான செலவைக் குறைக்கும் வகையில் தாட்கோ மூலமாகவே கட்டுநர்கள் நியமனம், கம்பி, சிமெண்ட், கதவுகள், ஜன்னல்கள், மின்சாதனப் பொருட்கள் மற்றும் நவீன பயோ செப்டிக் டேங்க் உள்ளிட்ட அனைத்தும் மிகக் குறைந்த விலையில் மொத்தமாகக் கொள்முதல் செய்யப்பட்டு, கட்டுமானப் பணியிடங்களுக்கே நேரடியாக வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ், நரிக்குறவர் மற்றும் பிற பழங்குடியினருக்கான வீடுகள், கள்ளக்குறிச்சி (கல்வராயன் மலை), திருவண்ணாமலை (ஜவ்வாது மலை) மற்றும் நீலகிரி போன்ற கடினமான மலைப் பகுதிகளில் கட்டப்பட்டு வருகின்றன. சில இடங்களில், வாகனப்பாதை அற்ற ஒத்தையடிப் பாதைகள் வழியாகவே கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லப்பட வேண்டும்.
தொழிலாளர்கள், பொருட்களைச் தலைச் சுமையாகவும், இழுவைக் கயிறுகள் மூல மாகவும் மிகுந்த சிரமங்களுக்கிடையே அதிக உயரத்துக்குக் கொண்டு செல்வது போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தாட்கோ இந்தப் பணியை அர்ப்பணிப்புடன் செய்கிறது. முதல் தொகுதியில் அனுமதிக்கப்பட்ட 1,500 வீடுகளில் 1,250 வீடுகளில் 1,000 வீடுகள் ஏப்.14 அன்றும், 250 வீடுகள் அக்.6 அன்றும் முதல்வரால் பயனாளிகளிடம் வழங்கப்பட்டுள்ளன.
கூடுதல் சதுர அடியில் நவீன வீடுகள்: தாட்கோவின் கட்டுமான செலவுக் குறைப்பு நடவடிக்கையால், அரசாணையில் குறிப்பிடப்பட்ட 269 சதுர அடியைவிட 40 சதுர அடி கூடுதலாக 309 சதுரஅடி வீடாகக் கட்டப்படுகின்றன. வசிப்பறை, படுக்கையறை, சமையலறை விட்ரிஃபைட் டைல்ஸ் தரை, யுபிவிசி ஜன்னல்கள், இரும்பு நிலையுடன் கூடிய மரப்பலகைக் மயலறை மற்றும் கழிப்பறை என அனைத்து வசதிகளுடன், கதவுகள், மற்றும் மின்இணைப்பு உள்ளிட்ட உட்கட்டமைப்பு அம்சங்களுடன் நவீன முறையில் கட்டப்படுகின்றன. இதுமட்டுமின்றி, தொகுப்பு வீடுகளாகக் கட்டப்படும் பகுதிகளில் சாலை, மின்விளக்கு, குடிநீர் மற்றும் கழிவுநீர்க் கால்வாய் போன்ற அத்தியாவசிய அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன.