மதுரை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பல்வேறு துறைகளிலும் ஆர்வத்துடன் இருக்கும் பெண்களுக்கு வழிகாட்டும் வகையிலுமான நிகழ்வுகளை கள அளவில் தொடர்ந்து நடத்தி வருகிறது. அந்த வகையில் மிரே அசெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துடன் இணைந்து ‘எம்எஃப் மந்த்ரா’ எனும் ‘முதலீடும் முன்னேற்றமும்’ என்கிற பெண்கள் மட்டுமே பங்கேற்கும் சிறப்பு நிகழ்வினை மதுரையில் நடத்துகிறது.
இந்த சிறப்பு நிகழ்வு வரும் மார்ச் 16 (சனிக்கிழமை) அன்று மதுரை காமராஜர் சாலையிலுள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் மாலை 4 மணிக்குத் தொடங்குகிறது. இந்த நிகழ்வில், பரஸ்பர நிதியில் பெண்கள் முதலீடு செய்வது குறித்தும், அவ்வாறு முதலீடு செய்வதன் மூலமாக அதிக லாபத்தை ஈட்டும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்படவுள்ளன.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக உமன் எண்டர்பிரனர்ஸ் சேர்மன் டாக்டர் ராஜகுமாரி ஜீவகன், மிரே அசெட் இன்வெஸ்ட்மெண்ட் மேனேஜர்ஸ் இந்தியா நிறுவன சீனியர் மேனேஜர் எஸ்.கோபிநாத் ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்க உள்ளனர்.
இந்த நிகழ்வில் பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள அனைத்து வயது பெண்களும் பங்கேற்று பயன்பெறலாம். அனுமதி இலவசம். கூடுதல் விவரங்களுக்கு 9843225389 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.
இந்த சிறப்பு நிகழ்வில் பங்கேற்க ஆர்வமுள்ள பெண்கள் https://www.htamil.org/MFMDU என்ற லிங்கில் பதிவுசெய்து கொள்ளலாம் அல்லது இத்துடன் உள்ள கியூஆர்கோடு மூலமாகவும் பதிவுசெய்து பங்கேற்கலாம்.