கோவை.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், பல்வேறு துறைகளிலும் ஆர்வத்துடன் இருப்பவர்களுக்கு வழிகாட்டும் வகையில் சிறப்புமிக்க பல நிகழ்வுகளை கள அளவில் தொடர்ந்து நடத்தி வருகிறது. அந்த வகையில் மிரே அசெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துடன் இணைந்து ‘எம்எஃப் மந்த்ரா’ எனும் ‘முதலீடும் முன்னேற்றமும்’ என்கிற சிறப்பு நிகழ்வினை கோவையில் நடத்துகிறது.
இந்த சிறப்பு நிகழ்வு வரும் செப். 16 (சனிக்கிழமை) அன்று கோவை ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலையிலுள்ள இந்திய வர்த்தக சபை அரங்கில் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில், பரஸ்பர நிதியில் முதலீடு செய்வது குறித்தும், அவ்வாறு முதலீடு செய்வதன் மூலமாக அதிக லாபத்தை ஈட்டும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்படவுள்ளன.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தமிழகத்தின் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், எழுத்தாளரும், மனித வள மேலாண்மை பயிற்றுநருமான சோம.வள்ளியப்பன், ப்ரகலா வெல்த் நிறுவனத்தின் இயக்குநர் சொக்கலிங்கம் பழனியப்பன், மிரே அசெட் இன்வெஸ்ட்மெண்ட் மேனேஜர்ஸ் இந்தியா (பி) நிறுவனத்தின் மண்டலத் தலைவர் (தமிழ்நாடு & கேரளா) சியாமா சுந்தர் ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்க உள்ளனர்.
இந்த நிகழ்வில் பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள அனைத்து வயதினரும் பங்கேற்று பயன்பெறலாம். அனுமதி இலவசம்.
பெட்டிச் செய்தி:
இந்த சிறப்பு நிகழ்வில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் https://www.htamil.org/MFmantraCBE என்ற லிங்கில் பதிவுசெய்து கொள்ளலாம் அல்லது இத்துடன் உள்ள கியூஆர்கோடு மூலமாகவும் பதிவுசெய்து பங்கேற்கலாம்..