சென்னைவாசிகளை வெகுவாகக் கவர்ந்த ‘காட்பரி இனிய கொண்டாட்டம்’ அவர்களின் இதயத்தில் பல நீங்காத நினைவுகளை விதைத்திருக்கிறது. இந்த சீசன் முழுவதும் இந்தப் பிரத்தியேக பிரச்சாரமானது மகிழ்ச்சி நிறைந்ததாகவும், பழைய நினைவுகளைத் தூண்டி, பலரையும் இன்னும் வேண்டும் என ஏக்கம் கொள்ள வைப்பதாகவும் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் உணவு வகைகள் நூற்றாண்டு கால பாரம்பரியத்தின் நீட்சியைத் தன்னுள் கொண்டுள்ளன. இந்த கலாச்சார பாராம்பரியத்தின் முக்கியத்துவத்தை காட்பரி அங்கீகரித்துள்ளது.
கங்கா ஸ்வீட்ஸ், சங்கீதா வெஜ் ரெஸ்டாரன்ட் மற்றும் ஹாட் பிரட்ஸ் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களுடன் காட்பரி மேற்கொண்ட ஒரு தனித்துவமான முயற்சி தமிழகத்தில் பல ஏக்கங்களை உருவாக்கியுள்ளது.
மாநிலத்தின் பிரபலங்களுக்கு மரியாதை செய்யும் விதமாக, இந்த நிறுவனங்களுடன் இணைந்து, மகிழ்ச்சியூட்டும் கலவையான புதிய சுவைகளை உருவாக்கியது. சமையற்கலை நிபுணரான ராகேஷ் சர்மா தனது தேர்ந்த அனுபவத்தின் மூலம் பிரத்யேக பதார்த்தங்களை உருவாக்கினார்.
அவற்றுக்கு தமிழகத்தின் பிரபலங்களான கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், நடிகை பிரியா பவானி சங்கர், பாடகி சிவாங்கி, பாடலாசிரியர் - பாடகர் அறிவு மற்றும் ஷெஃப் தாமுவின் பெயர்கள் சூட்டப்பட்டன. அவர்களின் யூடியூப் வீடியோக்கள் பெரிய வரவேற்பினைப் பெற்றதன் மூலமாக, தங்களின் மனம் கவர்ந்த பிரபலங்களின் பெயர்களில் உருவாக்கப்பட்ட புதிய பதார்த்தங்களின் சுவைமிகு உணவுகள் சென்னை வாழ் மக்களிடம் பெரும் வரவேற்பினைப் பெற்றது.
காட்பரி இனிய கொண்டாட்டத்துக்கு கிடைத்த வரவேற்பு மிகவும் அற்புதமானது. தங்களுக்கு பிடித்தமான பிரபலங்களின் பெயர்களில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் புதிய முயற்சி, பார்வையாளர்களைக் மிகவும் கவர்ந்தது.
இந்தப் புதிய பிரச்சாரம் பாரம்பரிய சுவைகளின் மகிழ்ச்சியைக் கொண்டாடியதோடு மட்டும் நிற்காமல் மக்களை ஒன்றிணைத்து, பாரம்பரிய கலாச்சார ஒற்றுமையின் உணர்வினைத் தூண்டியது. உள்ளூர் நிறுவனங்களின் ஆர்வம், படைப்பாற்றல் ஆகியவற்றுடன் நீங்காத நினைவுகளை வழங்குவதற்கான காட்பரியின் இந்த அர்ப்பணிப்பு, காட்பரி இனிய கொண்டாட்டத்தை அமோகமாக வெற்றியடைய வைத்துள்ளது.