வலைஞர் பக்கம்

ஜூலையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 9

செய்திப்பிரிவு

விஜய் டிவியில் சனி, ஞாயிறுகளில் மாலை 6.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சி, அடுத்த மாதம் நிறைவடைகிறது. அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், ஸ்வேதா மோகன், உன்னி கிருஷ்ணன் ஆகியோரை நடுவராகக் கொண்ட இந்த நிகழ்ச்சியில், 22 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதன் இறுதிப் போட்டிக்கு 3 பேர் ஏற்கெனவே தேர்வு பெற்றுவிட்டனர். 4-வது போட்டியாளர் வரும் வாரம் அறிவிக்கப்படுவார். 5-வது போட்டியாளரை, பார்வையாளர்கள் வாக்களித்து தேர்வு செய்ய இருக்கின்றனர். ஜூன் 25 ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில், வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.

இதையடுத்து ஜூலை மாதம் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9’ தொடங்க இருக்கிறது. அதில், திறமையான அடிதட்டு மக்களின் குழந்தைகள் நிகழ்ச்சிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக விஜய் டிவி தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT