வலைஞர் பக்கம்

அறிவோம் எளிதாக | அஞ்சல் குறியீட்டு எண்கள் - 6 இலக்கங்களுக்குப் பின்னால்..!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் அஞ்சல் அலுவலகங்கள் இயங்கி வருகிறன. இந்த அஞ்சல் அலுவலகங்களுகென ஆறு இலக்க எண் கொடுக்கப்பட்டிருக்கும். இது ஒவ்வொரு மண்டலத்திற்கும், ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒவ்வோரு மாவட்டத்திற்கும் வேறுபடும்.

இந்த ஆறு இலக்க எண் எதன் அடிப்படையில் வைக்கிறார்கள், ஏன் இது ஒவ்வொரு இடத்திற்கும் மாறுபட்டு உள்ளது என்பதை விளக்குகிறார் அஞ்சல் துறையில் பணியாற்றும் சேகர்.

”postal Intex Number ன் சுருக்கமே pin code. இந்தியாவில் மொத்தம் ஒன்பது அஞ்சல் மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்கள் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என 8 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.

ஆறு இலக்க எண்ணில் முதல் எண் இந்த மண்டலத்தை குறிக்கும். எடுத்துக்காட்டாக 1 மற்றும் 2 வட இந்தியாவை குறிக்கும். 3 மற்றும் 4 மேற்கு இந்தியாவைக் குறிக்கும். 5 மற்றும் 6 தென் இந்தியாவைக் குறிக்கும். 7 மற்றும் 8 கிழக்கிந்தியாவைக் குறிக்கும். 9 என முதலில் தொடங்கினால் அது ராணுவ மண்டலத்தைக் குறிக்கும்.

இரண்டாவது இருக்கும் எண் துணை மண்டலத்தை குறிக்கிறது. முதல் எண்ணையும் இரண்டாவது எண்ணையும் சேர்த்து 60 - 66 வரை இருந்தால், அது தமிழகத்தைக் குறிக்கிறது.

மூன்றாவதாக இருக்கும் எண் வரிசைபடுத்தப்பட்ட மாவட்டங்களைக் குறிக்கும். நான்காவதாக இருக்கும் எண் சர்வீஸ் ரூட்டை குறிக்கும்.

கடைசி இரண்டு எண் அஞ்சல் அலுவலகத்தை குறிக்கும். இந்த பின் கோட் இருப்பதால் தான் சுலபமாக எந்த மாநிலம், எந்த மாவட்டம், ஊர் என பிரித்தெடுக்க முடிகிறது. ஒரே பெயரில் ஊரும் தெருவும் பல இடங்களில் உள்ளது. இந்த நம்பர் இல்லையென்றால் சிக்கலாக இருந்திருக்கும்" என்றார்.

SCROLL FOR NEXT