தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா தமிழகம் முழுதும் வலம் வந்து திராவிடக் கட்சிகளை விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது உரை எப்படி இருக்கிறது என்பது குறித்த பார்வை இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்- குடும்ப கட்சி தானே! குடும்ப தலைவி பிரச்சாரம்.
ஆறுமுக கூட்டணிக்கு இனி ஏறுமுகம் தான்: திருச்செந்தூரில் பிரேமலதா பிரச்சாரம்
#இத்தன நாளா அவர் பேரு வைகோன்ல நினச்சேன்... அவரு பேரு ஆறுமுகமாம்ல...
ஆறுமுக கூட்டணிக்கு ஏறுமுகமா இறங்குமுகமா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்
விஜயகாந்த் 234 தொகுதியிலும் பிரச்சாரம் செய்வார்- பிரேமலதா.
எனவே மக்கள் அனைவரும் காலகேயர் மொழி கற்றுக்கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
*
அப்போ எல்லா தொகுதி மக்களுக்கும் எண்டர்டெயின்மெண்ட் இருக்கு.
இனி அண்ணி என்று அழைக்கவேண்டாம் அம்மா என்று அழையுங்கள் - பிரேமலதா #ஆத்தாடி இன்னும் ஒரு அம்மாவா?
உண்மையை சொன்னால் பிரேமலதா நன்றாக பேசுகிறார்.
விஜயகாந்த் 234 தொகுதியிலும் பிரச்சாரம் - பிரேமலதா.
எனவே அனைத்து வேட்பாளர்களும் தலைக்கவசம் அணியும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.
இளைஞர்களுக்கு வழிவிடுங்கள். கருணாநிதி, ஜெயலலிதாவை நிராகரியுங்கள்- பிரேமலதா பேச்சு.
(யாருப்பா இங்க இளைஞர்... அதானே யார்ரா அது?)
விஜயகாந்த் ஆட்சியில் அனைத்து நதிகளும் இணைக்கப்படும்- பிரேமலதா. #நைல் நதி சும்மாத்தா ஓடுது அதையும் இணைச்சிடுங்.
ஆட்சிக்கு வந்தால் அதிமுக ஊழல் அமைச்சர்களுக்கு நிரந்தர ஜெயில்- பிரேமலதா
இது என்ன புது கதையா இருக்கு நிரந்தர ஜெயில் இந்திய அரசியல் சட்டத்திலயே கிடையாதே?!
வேட்பாளர் அறிவிப்புக்கு பின் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார்: பிரேமலதா
#தட் விஜயகாந்த் தலைவரா இல்ல நான் தலைவரா மொமென்ட்..
ஆறு படத்துல ஐஸ்வர்யா மீட்டிங்ல பேசுற சீன் ஓடுதுன்னு நெனச்சேன்... டிவில பிரேமலதா பிரச்சாரம் பண்ணிட்டுருக்காங்க.. அவ்வவ்!
திரும்பி பார்க்க வைக்கிறார் பிரேமலதா.
அதிமுகவும் திமுகவும் விஷச்செடிகள்- பிரேமலதா
#உங்க கூட்டணி ஆளுங்கதானே மேடம் அந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றின தோட்டக்காரங்க..?
என்னை அண்ணியாக நினைக்க வேண்டாம். இனி நான் உங்களுக்கு அம்மா - பிரேமலதா
அனாதையாகூட இருந்துட்டு போறோம். எங்களுக்கு அம்மா வேண்டாந்தாயீ.
அதிமுக, திமுகவால் மதுவிலக்கை கொண்டு வரமுடியாது - பிரேமலதா
முதலில் உங்க தம்பி சுதிஷ் நடத்தும் மது பாரை மூடிட்டு மதுவிலக்கை பற்றி பேசலாமே.
விஜயகாந்த் 234 தொகுதியிலும் பிரச்சாரம் செய்வார்- பிரேமலதா
அப்ப 234 தொகுதிலயும் திமுக அதிமுக வெற்றி உறுதி #திராவிட கட்சிகள்
சென்னையில் வசித்தாலும் மதுரை மருமகளான நான் மதுரை கலாசாரத்தைத்தான் 25 ஆண்டுகளாக பின்பற்றுகிறேன் - பிரேமலதா விஜயகாந்த் வூட்டுலே மதுரை ஆட்சி தானாமாம்!
பிரேமலதா, விஜயகாந்த் அவரை பொண்ணு பாக்க வந்த கதையெல்லாம் சொல்றாங்க.. #நமக்கு வாய்த்த அரசியல்வாதிகளெல்லாம்...
"ஆறுமுக" கூட்டணிக்கு இனி ஏறுமுகம்தான் - திருச்செந்தூரில் பிரேமலதா
பார்த்தா அவ்வளவு முகமும் பாவமா இருக்கு!!
திருச்செந்தூரில் பிரேமலதா பேசும்போது, “இந்த தொகுதியில் ரோடு வசதிகூட இல்லை. நீங்கள் பணம் வாங்கி ஓட்டு போட்டால் இன்னும் 100 ஆண்டுக்கு இதே நிலைதான்”என்கிறார். உண்மைதான்... நானும் 25 ஆண்டுகளாக பார்க்கிறேன்... திருச்செந்தூரிலுள்ள ஒற்றை மெயின்ரோடுகூட ஒழுங்காக இருந்ததில்லை. இப்படி மக்கள் பிரச்சனைகளை பேசுங்கள்... கவனிக்கப்படுவீர்கள்.
விஜயகாந்துக்குப் பிறகு பிரேமலதா தான் தேமுதிக என்பது இன்னமும் அச்ச உணர்வை ஏற்படுத்துது..