வலைஞர் பக்கம்

பாஜகவுக்கு தெனாலிராமனின் யோசனைகள்

பி.எம்.சுதிர்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிக்கு கட்சிகளை இழுக்க இப்போது பெரிதும் கஷ்டப்படுவது பாஜகதான். கூட்டணிக் கட்சிகளை இழுக்க அக்கட்சிக்கு தெனாலிராமனின் யோசனைகள்.

பிரதமர் வெளிநாடு போகும்போதெல்லாம் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் உடன் செல்ல வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கலாம். மாதத்தில் பாதி நாட்கள் வெளியூரில் இருக்கலாமே என்ற ஆசையிலாவது சிலர் கூட்டணிக்கு வருவார்கள். தலைவர்களின் குடும்பத்தையும் அழைத்துப் போவதாக உறுதி அளித்தால் பலன் ரெட்டிப்பாகும்.

கூட்டணியில் சேர வலியுறுத்தி பிற கட்சித் தலைவர்களை வலியுறுத்தி விடப்பிடி ‘மிஸ்ட் கால்’ இயக்கத்தை நடத்தலாம். தொடர்ந்து அலறும் தொலைபேசியிடம் இருந்து தப்பிக்கவாவது சில கட்சிகள் கூட்டணியில் சேரும்.

‘மன் கி பாத்’ ஸ்டைலில் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் மோடி உருக்கமாக பேசலாம். அவரது பேச்சைக் கேட்டு மயங்கும் யாராவது கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. அப்படியும் வராத கட்சிகளின் மனதைக் கரைக்க அவற்றின் அலுவலகங்களுக்கு வெளியே கூட்டணிக்கு அழைப்பு விடுத்து பேனர்களை வைக்கலாம். தினமும் அதைப் பார்ப்பதால் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி சிலர் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது.

SCROLL FOR NEXT